துயர் பகிர்வு

சின்னத்துரை சிவானந்தம் (சுபாஜினி ரேடர்ஸ், முருகன்கோவில் - அருகாமை, கண்டி வீதி, கிளிநொச்சி)

தோற்றம் : 1947-02-28

மறைவு : 2021-01-13


  • மரண அறிவித்தல்

கொல்லங்கலட்டி, மடத்தடியைப் பிறப்பிடமாகவும், விளாத்தியடி உரும்பிராய் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சிவானந்தம் கடந்த (13.01.2021) புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், இராஜேஸ்வரி (ஓய்வுபெற்ற ஆசிரியர், கிளி{கிளிநொச்சி மகாவித்தியாலயம், யா{உரும்பிராய் சந்திரோதயா வித்தியாசாலை) அவர்களின் அன்புக் கணவரும், ரஜீவ், கிருபாலினி (ஆசிரியர், யா{கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலயம்), ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், அமரர்களான விநாயகமூர்த்தி, சிவசுப்பிரமணியம் மற்றும் யோகமலர் (உரும்பிராய்),        புனிதமலர் (இளவாலை), தவமலர் (ஜேர்மனி), ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14.01.2021 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் (விளாத்தியடி- உரும்பிராய் மேற்கு) நடைபெற்று, பின்னர்  கீரிமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
மனைவி: ராஜேஸ்வரி - 077 084 2512
மகள்: கிருபாலினி - 076 621 7043