துயர் பகிர்வு

திருமதி இந்திரபூபதி செல்வரட்ணம்

தோற்றம் : 1943-07-06

மறைவு : 2021-03-09


  • மரண அறிவித்தல்

நாவற்குழி சித்திவிநாயகர் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திருமதி இந்திரபூபதி செல்வரட்ணம் நேற்று (09.03.2021) செவ்வாய்க் கிழமை காலமானார்.
அன்னார் அமரர்களான இராசையா - கனகம்மா தம்பதியரின் அன்பு மகளும், அமரர்க ளான சின்னத்துரை-சரஸ்வதி தம்பதியரின் அன்பு மருமகளும், செல்வரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும் ஜெயகௌரி (சுவிஸ்), அகிலகௌரி, துவாரகி (லண்டன்) ஆகியோரின் அருமைத் தாயாரும், சிவகுமார் (சுவிஸ்), சுகுமார் (நோர்வே), ரஜிகரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், தூயவன் (சுவிஸ்), விஷாலி (சுவிஸ்), அனுஜன், அனோஜா, றதுஷன் (லண்டன்), சந்தோன் (லண்டன்) ஆகியோரின் அருமைப் பேர்த்தியும், இரத்தினபூபதி மற்றும் கனகராசா (கனடா), அமரர் இராசரத்தினம், நவமணி (கனடா), தியாகராசா, புஸ்பராணி (கனடா) ஆகி யோரின் அன்பு சகோதரியும், அமரர் பரமலிங்கம், அமரர், குண பாக்கியம், சற்குண லீலாவதி, அமரர் மகாலிங்கம், மங்கையர்க்கரசி, செல்வராசா (கனடா), காலஞ்சென்ற செல்வநாயகம் மற்றும் புஸ்பலீலாவதி, பஸ்பலீலாவதி (கனடா), கனகரட்ணம் (கனடா), குணரட்ணம் (ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனியும் ஸ்ரீஸ்கந்தராசா, கிரிஜா, அமரர் சுதந்திரன் ஆகியோரின் சிறியதாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (10.03.2021) புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் மதியம் 12.00 மணியளவில் தகனக்கிரியை களுக்காக நாவற்குழி மேற்கு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்,
தகவல்:
குடும்பத்தினர்.
சித்திவிநாயகர் கோவிலடி, நாவற்குழி.
021 205 0915
077 567 0194