துயர் பகிர்வு

இளையதம்பி நாகலிங்கம்

தோற்றம் : 1931-05-11

மறைவு : 2021-04-27


  • மரண அறிவித்தல்
காடிவளை இளவாலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இளையதம்பி நாகலிங்கம் அவர்கள் நேற்று (27.04.2021) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற இளையதம்பி விசாலாட்சி தம்பதியரின் புதல்வரும் காலஞ்சென்ற கந்தையா தங்கம்மா தம்பதியரின் மருமகனும், அன்னலட்சுமியின் (பொன்னம்மா) அன்புக் கணவரும், வரதராஜா, அருந்தவராஜா, யோகராஜா, விஜிதா, வனஜா, ஆதிரையன் (ஆதி) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், யோகராணி, மாலதி, யோகமதி, பாலராஜா, விஜேந்திரன், துளசி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, நாகம்மா மற்றும் நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும், இராசேந்திரத்தின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (28.04.2021) புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக சேந்தாங்குளம் பாதர்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: மனைவி
அன்னலட்சுமி (பொன்னம்மா)
021 225 2332
காடிவளை,
இளவாலை.