துயர் பகிர்வு

திருமதி பூமாதேவி மோகனதாஸ்

தோற்றம் : 1001-01-01

மறைவு : 2021-04-28


  • மரண அறிவித்தல்

சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும் இல.49/6, மணல்தரை வீதி, கந்தர் மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பூமாதேவி மோகனதாஸ் அவர்கள் நேற்று (28.04.2021) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற மோகனதாஸின் அன்பு மனைவியும், காலஞ் சென்ற கைலாசபிள்ளை- செல்லம் தம்பதியரின் புத்திரியும், காலஞ்சென்ற மயில்வாகனம்- நேசம்மா தம்பதியரின் மருமகளும், காலஞ்சென்றவர்க ளான கந்தையா - மகாதேவி, பூரணசிங்கம், பூபாலசிங்கம் (சுவாமியார்) ஆகியோரின் அன்பு சகோதரியும், மீனாட்சி (இளைப்பாறிய ஆசிரியர்) காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் (சுந்தரம் பிரதர்ஸ்), பார்பதாதேவி - சோபனாம்பாள், சுபத்திரா தேவி மற்றும் சரஸ்வதி, னுச. கிருஸ்ணதாஸ் ஆகி யோரின் மைத்துனியும், ரமணியம்மா (நோர்வே) கலையரசி, காலஞ் சென்றவர்களான பாலகுமாரன், சற்குமாரன் ஆகியோரின் தாயாரும், பேரின்ப சிவம், உருத்திரானந்தா ஆகியோரின் மாமியாரும், அருண்தன், அகஸ் தியா, அகஸ்தியன், பிரவீன், சதானந்தா, பிரவாணி, பவன் ஆகி யோரின் பேர்த்தியும், ஆதனின் அன்பு பூட்டியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29.04.2021 வியாழக்கிழமை பி.ப 2.00 மணியளவில் அவரின் மகளின் இல்லத்தில் (802, பலாலி வீதி, திரு நெல்வேலி) நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக பூதவுடல் திருநெல்வேலி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: மு.உருத்திரானந்தா
(மருமகன்)
021 222 2732, 077 2122 154
இல.802, பலாலி வீதி,
திருநெல்வேலி.