துயர் பகிர்வு

கணபதி கந்தையா

தோற்றம் : 1927-02-21

மறைவு : 2021-05-01


  • மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கணபதி கந்தையா நேற்று  (01.05.2021) சனிக்கிழமை இறைபதம் எய்தியுள்ளார்.
அன்னார் கணபதி  - சின்னாச்சி தம்பதியரின் பாசமிகு மகனும், கந்தையா - இராசமணி தம்பதியரின் பாசமிகு மருமகனும், தவமணியின் அன்புக்                  கணவரும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, சேதுப்பிள்ளை, செல்லையா ஆகியோரின் பாசமிகு சகோதரனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சோதிப்பிள்ளை, செல்வராசா,  வண்ணமணி ஆகியோரின் மைத்துனரும், தர்மராஜா (பிரான்ஸ்), தமயந்தி, சுகந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,            நகுலேஸ்வரி (பிரான்ஸ்), முருகதாஸ், செல்வரட்ணம் ஆகியோரின் பாசமிகு         மாமனும், திலக்ஷன், செவ்வந்தி, திலீப், திபர்ஷன், யனுஸ்ரன் (சுவிஸ்), தனுஷா, கோமிலன் (பிரான்ஸ்) ஆகியோரின் பேரனும், டினுசாந், சாயிஷ்றீ, மகதீஸ் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (02.05.2021) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல்     தகனக்கிரியைக்காக அளவெட்டி கொட்டுப்பனை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:  
குடும்பத்தினர்.