துயர் பகிர்வு

திருமதி யோகானந்தா லோகேஸ்வரி

தோற்றம் : 1951-01-17

மறைவு : 2021-05-16


  • மரண அறிவித்தல்

சாவகச்சேரி சங்கத்தானையை பிறப்பிடமாகவும் 174/11A, கோவில் வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி யோகானந்தா லோகேஸ்வரி நேற்று (16.05.2021) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் அமரர் அருணாசலம் யோகானந்தா (முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் - கணிதம், தென்மராட்சி) அவர்களின் அன்பு மனைவியும், அமரர்களான நாகலிங்கம் செல்லம்மா தம்பதியரின் அன்பு மகளும், அமரர்களான அருணாசலம் இராசமணி தம்பதியரின் அன்பு மருமகளும், மாறன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர்-யாழ் பல்கலைக்கழகம்), மகிழ்னன் (ஆசிரியர், யா/வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும், வித்தியா (அபிவிருத்தி உத்தியோகத்தர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை), சுதர்சினி (ஆசிரியை, யா/ முத்துத்தம்பி மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமியும், செந்தூரி, சஞ்ஜய், சாதனா, சுவஷ்திகன், டிவேஷ்திகன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும், அமரர் சரவணமுத்து மற்றும் மணிவாசகம்பிள்ளை (லண்டன்), தனபாக்கியம் (மீசாலை), சந்திரபூபதி (சங்கத்தானை), ஞானசௌந்தரலிங்கம் (லண்டன்), குணமணி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (17.05.2021) திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் நல்லூர் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக மதியம் 12.00  மணியளவில் செம்மணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 
தகவல்: பிள்ளைகள்.
யோ.மாறன் - 0777 696 771
யோ. மகிழ்னன் - 077 304 9831
 
174/11A, கோவில் வீதி,
நல்லூர், யாழ்ப்பாணம்.