துயர் பகிர்வு

சண்முகம்பிள்ளை கனகலிங்கம்

தோற்றம் : 0001-01-01

மறைவு : 2021-09-02


  • மரண அறிவித்தல்

அராலி தெற்கை பிறப்பிடமாகவும் சங்கரத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம்பிள்ளை கனகலிங்கம் அவர்கள் நேற்று (02.09.2021) வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சண்முகம்பிள்ளை செல்வலட்சுமி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை சுந்தரம் தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற தனலட்சுமியின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், கனகாம்பிகை மற்றும் பரமலிங்கம், யோகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும், கலைச்செல்வி, குணச்செல்வன், காலஞ் சென்ற கருணானந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும், முருகவேல், சோபனா, சீத்தா ஆகியோரின் அன்பு மாமனாரும், கலாநிதியின் ஆசையப்பாவும், மாதங்கி, சேயோன், சாம்பவி, டயான், அருண்முகிலன், ஆர்த்தி, சாய்கிதன் ஆகியோரின் அன்புப் பேரனாரும், அகன்யனின் அன்புப் பூட்டப்பாவும்  ஆவார்.
அன்னாரின் இல்லத்தில் இறுதி அஞ்சலி நிகழ்வு நடைபெற்று, பூதவுடல் இன்று (03.09.2021) காலை ஏழு மணியளவில் தகனத்திற்காக வழுக்கையாறு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.

2ஆம் கள்ளி ஒழுங்கை,
சங்கரத்தை, வட்டுக்கோட்டை.