துயர் பகிர்வு

கார்த்திகேசு சித்திரவடிவேலு (ஓய்வுநிலைப் பேராசிரியர், யாழ் பல்கலைக்கழகம்)

தோற்றம் : 0001-01-01

மறைவு : 2021-09-03


  • மரண அறிவித்தல்

சந்நிதி வீதி, தம்பாலை அச்சுவேலியைச் சேர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் விலங்கியல்துறை, தாவரவியல் துறைத் தலைவரும் கடல் வள அபிவிருத்தி நிலைய பணிப்பாளருமான ஓய்வுநிலை பேராசிரியர் கார்த்திகேசு சித்திரவடிவேலு அவர்கள் நேற்று (03.09.2021) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கார்த்திகேசு இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி மனோன்மணி தம்பதியரின் மருமகனும், திருமதி தவமலரின் பாசமிகு கணவரும், கருணசீலன் (லண்டன்), தர்மசீலன் (லண்டன்), துஸ்யந்தி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும். கௌசலா (லண்டன்), கங்கேஸ்வரி (லண்டன்), யோகேஸ்வரன் (லண்டன்) ஆகியோரின் மாமனாரும், கபிலன், கமலிக்கா, கவிதா, தனுஜா, யதுசன், பவித்திரா ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று (03.09.2021) வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

சி. கருணசீலன் (மகன்) : 00447771708349
சி.தர்மசீலன் (மகன்) : 0044793139276
செ.யோகேஸ்வரன் (மருமகன்) : 00447404971884
யோ.துஷ்யந்தி (மகள்) : 0094212058307