துயர் பகிர்வு

திருமதி வயித்திலிங்கம் யோகம்மா (செல்வம்)

தோற்றம் : 1951-07-17

மறைவு : 2021-10-01


  • மரண அறிவித்தல்

புதுமடம் உடுவில் தெற்கு, மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட          வயித்திலிங்கம் யோகம்மா (செல்வம்) அவர்கள் கடந்த (01.10.2021)வெள்ளிக்கிழமை இறை வனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பாலர்  - பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ் சென்றவர்களான வல்லிபுரம் - செல்லம்மா தம்பதிகளின்  அன்பு மருமகளும், காலஞ்சென்ற  வல்லிபுரம் வயித்திலிங்கம் (மணியம் ஆரியகுமார்)  அவர்களின் அன்பு மனைவியும், செல்வராசா,  யோகநாதன் (பிரான்ஸ்), ஸ்ரீதரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், வயீகரன் (கனடா), கௌரி (ஜேர்மன்), கீர்த்;திகா, வர்சிகா (கனடா), சிந்துகா ஆகியோ ரின் பாசமிகு தாயும், வைதேகி  (கனடா), ஜெனாத்தனன் (ஜேர்மன்),  பலஸ்ரியன் (கனடா), பிரசாந் ஆகியோரின் அன்பு மாமியும்,  நியோதா (ஜேர்மன்), நொறிஸ் (ஜேர்மன்), வியோனா, (கனடா) விதுஷா (கனடா) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (06.10.2021) புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல்  தகனக்கிரியைக்காக மானிப்பாய் இந்து  மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்;, நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்
021 225 5310
புதுமடம்,
உடுவில் தெற்கு,
மானிப்பாய்.