துயர் பகிர்வு

திரு. நாகநாதர் இராஜரட்ணம் (ஓய்வுபெற்ற சாலை முகாமையாளர், வடபிராந்திய போக்குவரத்து சபை, மன்னார் சாலை, காரைநகர் சாலை)

தோற்றம் : 1001-01-01

மறைவு : 2021-10-15


  • மரண அறிவித்தல்
சிறுவிளான் இளவாலையை பிறப்பிடமாகவும் பிறவுண் வீதி, நீராவியடி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகநாதர் இராஜரட்ணம் நேற்று (15.10.2021) வெள்ளிக்கிழமை சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகநாதர், விசாலாட்சி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா கண்ணாம்பிகை தம்பதியரின் அன்பு மரு மகனும், மனோகரி (கௌரி) யின் அன்புக் கணவரும், உதயகரன் (HNB), திவிஷா (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான நாகரட்ணம், சபாரட்ணம் மற்றும் இராசலஷ்சுமி, ருக்குமணிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதர னும், காலஞ்சென்ற இந்திராணி மற்றும் புஸ்பராணி, செல்வராணி, சிவானந்தன், யோகேஸ்வரி, லீலாவதி, காலஞ்சென்ற ஜெயானந்தன் ஆகியோரின் அருமை மைத்துனரும், சிவச்செல்வனின் அன்பு மாமனாரும் அஜேஸ், றோஜன், பிரித்தா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (16.10.2021) சனிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்,

தகவல்:
குடும்பத்தினர்.

இ.உதயகரன் - 0773608875
இல.04, 1ம் ஒழுங்கை,
பிறவுண் வீதி, நீராவியடி, யாழ்ப்பாணம்.
 
 
 
 
 
Attachments area