துயர் பகிர்வு
தோற்றம் : 1001-01-01
மறைவு : 2022-07-29
- மரண அறிவித்தல்
சின்னாலங்கண்டு வீதி, அரியாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட குஞ்சர் மயில்வாகனம் (ஓய்வுபெற்ற பொதியாளர், அரச மருந்துக்களஞ்சியம் - பண்ணை, களஞ்சியக்காப்பாளர், சுகாதாரத் திணைக்களம் -யாழ்ப்பாணம்) அவர்கள் நேற்று முன்தினம் (29.07.2022) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற குஞ்சர் - முத்துப்பிள்ளை தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ் சென்ற சீனியர் - சின்னப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும், காலஞ்சென்ற நாகம்மா வின் பாசமிகு கணவரும், கமலாம்பிகை, கருணாநிதி (நோர்வே), குணவதிஅம்மா, சற்குணவதி, றஞ்சனாதேவி, காலஞ்சென்ற விபுலானந்தன் ஆகியோரின் அன்பு அண்ணனும், தனபாலசிங்கம், மேரி (நோர்வே), பரம்சோதி, தேவதாஸ், இராஜேஸ்வரன், காலஞ்சென்ற பஞ்சரத்தினம் ஆகியோரின் மைத்துனரும், தயாகரன் (கனடா), கலாகரன் (ஜேர்மனி), மதிகரன், தயாளினி (டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும், சுமணா (ஜேர்மனி), வனஜாதேவி, சந்திரபாமா (டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமனாரும், சுதர்மினா, பேதுஷன், தம்ஷிகா, பிறிஸ்கா (ஜேர்மனி), கஸ்வினி (ஜேர்மனி), அர்ஜூன் (ஜேர்மனி), அஸ்விந் (ஜேர்மனி), அலிஸ்ரன் (டென்மார்க்), லிசேற்றா (டென்மார்க்), சுரேஸ் ஆகியோரின் பேரனும், சகானா, சந்தியா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (31.07.2022) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்hரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்
077 650 5143
19/1 சின்னாலங்கண்டு வீதி,
அரியாலை.