துயர் பகிர்வு

செல்வி யூ. ஹர்ஷனா

தோற்றம் : 2010-10-03

மறைவு : 2022-11-06


  • மரண அறிவித்தல்

அடப்பன் வீதி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி யூ. ஹர்ஷனா  கடந்த (06.11.2022) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் யூட்தயாபதி, ஜெனற் றொசானி (ஆசிரியர், யா{ கொழும்புத்துறை சென்.ஜோசப் வித்தியாலயம்) தம்பதியரின் அன்பு மகளும், நிறோஜன், ஷஹானன் (மாணவர், யா{ புனித பத்திரிசியார் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், அந்தோனிப்பிள்ளை, இராசம்மா, புவனேந்திரன், காலஞ்சென்ற மேரி அன்னரத்தினம் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், நிசாபதி, ஜெயபதி, விஜயபதி, றூபபதி, ஜெனற்நிலானி (பிரான்ஸ்) ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் இன்று (08.11.2022) செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு புனித கொஞ்சேஞ்சி மாதா பேராலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு புனித கொஞ்சேஞ்சி மாதா  சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்

அடப்பன் வீதி, யாழ்ப்பாணம்.