துயர் பகிர்வு

தோற்றம் : 1945-03-03
மறைவு : 2022-11-09
- மரண அறிவித்தல்
கச்சேரி நல்லூரைப் பிறப்பிடமாகவும் V.H. லேன் இருபாலையை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு தியாகராஜா கடந்த (09.11.2022) புதன்கிழமை சிவபதம் அடைந்து விட்டார்.
அன்னார் முத்துப்பிள்ளை கதிரவேலு தம்பதிகளின் அன்பு மகனும், சீதாலட்சுமி சின்னத்துரை தம்பதிகளின் மருமகனும், இராசமணியின் (சந்திரா) அன்புக் கணவரும், கிருஸ்ணராசா (கனடா), கீதாஞ்சலி (இருபாலை), தேவராசா (கிளிநொச்சி கச்சேரி), பிரியதர்சினி (கொழும்பு), குகராசா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சண்முகராசா, தர்மகுலசிங்கம், கணேசலிங்கம், இராசலிங்கம், லீலாவதி, ரதிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (13.11.2022) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லமான V.H .லேன் இருபாலையில் நடைபெற்று பூதவுடல் செக்கடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்
நரசிங்க வைரவர் கோவிலடி,
ஏ.ர். லேன் இருபாலை,
கோப்பாய்.