துயர் பகிர்வு

முருகேசு தனபாலசிங்கம் (பாலன்)

தோற்றம் : 1951-03-10

மறைவு : 2022-12-13


  • மரண அறிவித்தல்

மேலைக்கரம்பொன் ஐத்தாம்புலத்தைப் பிறப்பிடமாகவும்,         பருத்தித்துறை  வீதி, நல்லூர் கலைமகள் ஸ்ரோர்ஸ் முன்னாள்    உரிமையாளரும், மண்கும்பானில் வசித்தவரும், தற்போது ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தனபால சிங்கம் கடந்த (13.12.2022) செவ்வாய்க்கிழமை ஜேர்மனியில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு (சின்னத்தம்பி) (நீதிமன்றம்-ஊர்காவற்றுறை) மீனாட்சி தம்பதியினரின் ஏக புதல்வனும், மண்கும்பானைச் சேர்ந்த காலஞ்சென்ற  செல்லத் துரை - சின்னம்மா தம்பதியினரின் மருமகனும், சரோஜினி தேவியின் அன்புக் கணவரும், நிவேதிகா, மலரவன், தனுஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சரோஜினிதேவி, லக்சுமிதேவி (ஜேர்மனி), பத்மாதேவி, ரஞ்சினிதேவி (ஜேர்மனி), அம்பிகாதேவி, ஜெகதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், கிருஸ்ணதாஸ், ரவீந்திரன் (ஜேர்மனி), காலஞ்சென்ற மகாதேவன், அருமைநாயகம் (ஜேர்மனி), பற்குணராஜா, பாலச்சந்திரன் ஆகியோரின்  மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் (22.12.2022) வியாழக்கிழமை ஜேர்மனியில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.

திருமதி அம்பிகாதேவி பற்குணராஜா
யாழ்ப்பாணம்.