துயர் பகிர்வு
தோற்றம் : 1001-01-01
மறைவு : 2022-12-31
- மரண அறிவித்தல்
நுணாவில் மத்தி சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவஞானம் செல்வராணி அவர்கள் (31.12.2022) சனிக் கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகராஜா கண்மனி தம்பதியரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற அரியகுட்டி சிவஞானம் அவர்களின் அன்பு மனைவியும், சிவாஜினி (Norway) அவர்களின் பாசமிகு தாயாரும், சத்தியசீலனின் (Norway) அன்பு மாமியாரும், சற்குருராணி (UK), காலஞ்சென்ற தங்கராணி (UK), பாலராஜா (UK), பத்மராணி, விமலராணி (France), தர்மராணி (France) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்ற கந்தசாமி (France), சுகுமார் (UK), பவானி (UK), ராஜதுரை (UK), மனோகரன் (France), கரிகரன் (France) ஆகியோரின் அன்பு மைத்துனியும், சஜித், துர்க்கா (Norway) சஜிதா (Norway), சஜனுகா (Norway) ஆகியோரின் பேர்த்தியும், ஆரிஜனின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (02.01.2023) திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியை களுக்காக கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.
நுணாவில் மத்தி,
சாவகச்சேரி.