துயர் பகிர்வு

மகேஸ்வரன் வாகீசன் (A/L 2011, சென்ஜோன்ஸ் கல்லூரி, பழைய மாணவன் Design Engineer, 2G Energietechnik GMBH Benzstra Be 3/ D- 48619 Heek)

தோற்றம் : 1992-07-26

மறைவு : 2019-10-07


  • மரண அறிவித்தல்

நீதவான் வளவு, கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும் ஜேர்மன் , Heek ஐ வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் வாகீசன் 07.10.2019 திங்கட்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மாணிக்கமுத்து – மயில்வாகனம் - முத்துப்பிள்ளை , காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் -– இராசாம்பிகை தம்பதிகளின் அன்புப் பேரனும் மகேஸ்வரன் (ராசா) - உதயகுமாரி தம்பதிகளின் பாசமிகு மகனும் விதுனன் (Director, KUM Quality Engineering (Pvt)Ltd), சாருஷா (QA, NAVOTAR Soft Ware (Pvt)Ltd) ஆகியோரின் அன்புச் சகோதரனும் முத்துமயில்வாகனம் - அம்பிகை (ஜேர்மனி), இரத்தினமுத்து மயில்வாகனம் - இந்திராணி (கனடா), Dr. மனோகரன் - அகிலினி(நோர்வே), மயூரகுமார் - செல்வரூபி (கொழும்பு) ஆகியோரின் பெறாமகனும் சுகுமார் - காலஞ்சென்ற நந்தினி(கொழும்பு), காலஞ்சென்ற ஜெயக்குமார், விஜயகுமார் - தேசிங்கராணி(கட்டார்), இந்திரகுமார் - யோகேஸ்வரி (கொழும்பு), செல்வச்சந்திரன் - ஜெயப்பிரசாந்தி (ஆஸ்திரேலியா) ஆகியோரின் மருமகனும் மகிந்தன், அபிராமி, மதுரா, ஆதித்தன், மகிஷா, மித்திரன், மயூரி, தர்சனா, ஆதவன், ஆரணி ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரனும் ஆஷா, அஜந்தன், விஜிராம், பவித்திரன், துஷியந்தன், றதிகன், யதுஷன், அஸ்வினி, அபிலாஷ், அத்மிகா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (17.10.2019) வியாழக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கோப்பாய் கந்தன்காடு இந்துமயானத்துக்கு பி.ப 2.00 மணியளவில் எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் :
தந்தை - மகேஸ்வரன் (ராசா)
077 615 1266 \ 077 722 7615