துயர் பகிர்வு

கனகமணி துரைச்சாமி

தோற்றம் : 1934-06-28

மறைவு : 2019-10-22


  • மரண அறிவித்தல்
புங்குடுதீவு 3 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நந்தாவில் அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகமணி துரைச்சாமி நேற்று (22.10.2019) செவ்வாய்க் கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற துரைச்சாமியின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் வள்ளியம்மை தம்பதிகளின்  அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பெரியதங்கச்சி தம்பதிகளின் மருமகளும் காலஞ்சென்றவர்களான கோபாலப்பிள்ளை, செல்லம்மா, சின்னத்துரை, முருகேசு, சின்னம்மா, முத்துக்குமாரு,  செல்லையா ஆகியோரின் அன்புச்சகோதரியும் மனோன்மணி காலஞ் சென்றவர் களான சிவகுமார், சகுந்தலாதேவி மற்றும் சிவராசா (கண்ணன்), சிவபாலன் (காந்தி), சிவலிங்கம் (ஆனந்தி) ஆகியோரின் பாசமிகு தாயாரும் காலஞ்சென்ற தர்மபாலன் மற்றும் மகேந்திரன், யோகேஸ்வரி (ஜெயா), திருவருட் செல்வி (செல்வி), இராஜேஸ்வரி (ராசி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் கல்பனா, மதுமதி, ஜெயபிரதாப், மயூரன் மயூரி, தமிழினி, சாயித்தியன், சாயித்தியா, சாதுரியா, வாகீசன், சுதேசன், கௌசிகன், சிவகுமார், ரவிசங்கர், தாரிணி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் சாதனா, தனுசாந், நவினேஸ் , நிதீன், அஷ்விதா ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள்  இன்று (23.10.2019) புதன்கிழமை பி.ப 3.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கொக்குவில் இந்து மயா னத்தில் தகனஞ்செய்யப்படும்.
 இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


நந்தாவில் அம்மன் வீதி, கொக்குவில்
தகவல் : குடும்பத்தினர்
021 492 1894. 077 547 3217