துயர் பகிர்வு

திருமதி ஞானேஸ்வரி தனபாலசிங்கம்

தோற்றம் : 1943-11-26

மறைவு : 2019-10-21


  • மரண அறிவித்தல்

மாத்தளையைப் பிறப்பிடமாகவும் கொல்லன்கலட்டி, சுழிபுரம் மேற்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஞானேஸ்வரி தனபாலசிங்கம் கடந்த (21.10.2019) திங்கட்கிழமை கொல்லன்கலட்டியில் இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் தனபாலசிங்கத்தின் (குஞ்சர் - ஓய்வுநிலை மின்சாரவியலாளர், காகித ஆலை வாழைச்சேனை) அன்பு துணைவியும் மயூரனின் (பிரான்ஸ்) அன்புத்தாயா ரும் நளினியின் (பிரான்ஸ்) பாசமிகு மாமியாரும் பவித்திரா, அஸ்வின், சஞ்சய் ஆகியோரின் அருமைப்பேர்த்தியும் காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் சிவபாதசுந்தரம் சிவசிதம்பரம் மற்றும் பரமேஸ்வரி (நியூசிலாந்து), மகேஸ்வரி, சிவப் பிரகாசம் (மலேசியா), குகனேஸ்வரி, இரத்தினேஸ்வரி (சுவிற்சர்லாந்து), பரமேஸ்வரன் (ஓய்வுநிலை நில அளவையாளர்), ஆகியோரின் அன்புச்சகோதரியும் வை.சரஸ்வதி, காலஞ்சென்ற சி.துரைசிங்கம், ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள்  நாளை (24.10.2019) வியாழக்கிழமை காலை 9.00  மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று  திருவுடல் தகனக்கிரியைக்காக கீரிமலை  இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
 இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


மடத்தடி,  கொல்லன்கலட்டி, தெல்லிப்பழை.

தகவல் : சி.தனபாலசிங்கம்
(கணவர்-குஞ்சர்)
021 205 9276