துயர் பகிர்வு

திருமதி புளசம் திருமலர் மாணிக்கசிங்கம் (ஓய்வுநிலை ஆசிரியர்)

தோற்றம் : 1939-04-07

மறைவு : 2019-10-28


  • மரண அறிவித்தல்
“நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். 

என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தை காத்துக்கொண்டேன்”       (2 திமொத்தேயு 4:7)                                                                                                                                                                                மட்டுவில் தெற்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி புளசம் திருமலர் மாணிக்கசிங்கம் நேற்று (28.10.2019) திங்கட்கிழமை கர்த்தருக்குள்         நித்திரை அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற  மாணிக்கசிங்கம் (சாரதி- இலங்கை போக்குவரத்துச்சபை) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற தேவநேசன் நிறோசன் (பிரதேச செயலகம், சாவகச்சேரி), செல்வN நசன் சுதர்ஷன் (ஆசிரியர்- யா{ கைதடி விக்கினேஸ்வர வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும் டெவினா டிலோஜனா (ஆசிரியர்- கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மாமியாரும் பிறிண்சஸ் மகிழ்மலர், கிங்ஸ்லி ஆனந்தராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் திருமதி றஞ்சிதமலர், திருமதி குலமணி, காலஞ்சென்றவர்களான யோகராணி, ஜெயசிங்கம், இரட்ணசிங்கம், இராசமலர் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.  அன்னாரின் நல்லடக்க ஆராதனை நாளை  (30.10.2019) புதன்கிழமை காலை 9.30 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் உடுவில் மல்வம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

“சின்னப்பா வாசா”
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி.

தகவல்:
குடும்பத்தினர்.
077 674 3584