துயர் பகிர்வு

திருமதி ஜோண் பப்ரிஸ்ற் பிலோமினம்மா

தோற்றம் : 1939-07-08

மறைவு : 2019-12-28


  • மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
திருமதி ஜோண் பப்ரிஸ்ற் பிலோமினம்மா 
(செல்லமணி)                            மண்ணில்
08.07.1939                         28.12.2019
மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் 88A, தேவாலய வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜோண் பப்ரிஸ்ட் பிலோமினம்மா நேற்று (28.12.2019) அன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. சந்தியா சாமிநாதர், நீக்கிலாப்பிள்ளை மாகிறேட் ஆகியோரின் அன்பு மகளும், காலம்சென்ற திரு. மடுத்தீன் ஜோண் பப்ரிஸ்ட் அவர்களின் அன்பு மனைவியும், அருட்பணி ஜோண் பப்ரிஸ்ட் அன்ரனி (தாசன்) பங்குத்தந்தை, யாழ் அடைக்கல அன்னை ஆலயம், மேரி பியாற்றிஸ் (அவுஸ்திரேலியா), வின்சென்ரி (பிரான்ஸ்), அருட்சகோதரி பிறிசில்லா (திருச்சிலுவைக் கன்னியர்), விக்ரறின், மேரியூட், இயூஜின் கிறிஸ்ரி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும், றெஜினா (பிரான்ஸ்), கியோமர் றஞ்சித், சேளின் சர்மினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும், கொட்பிரி (அவுஸ்தி ரேலியா), செறினா (பிரான்ஸ்), றொஸ்ணி (மாணவி, யாழ் திருக்குடும்பக் கன்னியர் மட தேசிய பாடசாலை) யூபிசாலி, பப்ரிஸ்ரா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 88A, தேவாலய வீதி, யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (ஞாயிறு) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளைய தினம் திங்கள் (30.12.2019) காலை 10.00 மணிக்கு மண்டைதீவிற்கு எடுத்துச் செல்லப்படும். 30.12.2019 திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு மண்டைதீவு புனித பேதுருவானவரின் ஆலயத்தில் நடைபெறும் இரங்கற்திருப்பலியைத் தொடர்ந்து மண்டைதீவு புனித பேதுருவானவர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்;யப்படும். 
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: அருட்பணி. து.டீ. அன்ரனி (மகன்)