துயர் பகிர்வு

அமிர்தகுலசிங்கம் நிரோஜன்

தோற்றம் : 1997-11-19

மறைவு : 2019-12-31


  • மரண அறிவித்தல்

கோவில் வாசல், இணுவில் மேற்கு, இணுவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிட மாகவும் கொண்ட அமிர்தகுலசிங்கம் நிரோஜன் {அலுவலக உதவியாளர், பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் (நிர்வாகம்) வடமாகாணசபை} கடந்த (31.12.2019) செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் மகாலிங்கம் அமிர்தகுலசிங்கம் (முகாமைத்துவ உதவியாளர், வலிகாமம் வலயக்கல்வி அலுவலகம் - மருதனார்மடம்) - யோகேஸ்வரி தம்பதி களின் கனிஸ்ட புதல்வனும்  பிரியங்கா (சுகாதார முகாமைத்துவ உதவியாளர், யாழ் போதனா வைத்தியசாலை), அரவிந்தன் (கிராம அலுவலர் j/203 ஏழாலை தெற்கு) ஆகியோரின் அன்புச்சகோதரனும் காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் கனகமணி காலஞ்சென்றவர்களான நல்லையா - சரஸ்வதி ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (02.01.2020) வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்;கிரி யைகளுக்காக காரைக்கால் இந்துமயானத்திற்கு எடுத்;துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

கந்தசுவாமி கோவில் வீதி,
இணுவில் மேற்கு, இணுவில்

தகவல்: குடும்பத்தினர்.