துயர் பகிர்வு

நல்லையா கிருபாகரன் K.M Auto sales Owner in Canada

தோற்றம் : 1970-11-23

மறைவு : 2020-02-11


  • மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் கெருடாவில்  தொண்டைமானாற்றை பிறப்பிடமாகவும் கனடா - மொன்றியலை  வதிவிடமா கவும் கொண்ட  நல்லையா கிருபாகரன் கடந்த (11.02.2020) செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தசாமி (அமெரிக்கன்), செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும் காலஞ்சென்றவர்களான நல்லையா -  மகேஸ்வரி தம்பதிகளின்; ஏக புதல்வனும் காலஞ் சென்ற முருகேசு மற்றும் மகேஸ்வரி தம்;பதிகளின் அன்பு மருமகனும்  ஞானரூபியின் அன்புக் கணவரும்  மதுஸ், வர்ஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும் வாசுகியின் அன்புச் சகோதரனும் கேதீஸ்வரனின்  மைத்துனரும் காலஞ்சென்ற  கேசவன் மற்றும்  தர்சினி (கனடா), ஆர்த்தன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் காலஞ்சென்ற பற்குணேஸ்வரி மற்றும் புவனேஸ்வரி, இராஜேஸ்வரி, சூரியேஸ்வரி (நோர்வே), காலஞ்சென்ற இரத்தி னேஸ்வரி ஆகியோரின் பெறாமகனும் குலவீரசிங்கம், காலஞ்சென்றவர்களான தர்ம குலசிங்கம், இரத்தினசிங்கம் ஆகியோரின் மருமகனும் பகீரதன், பகீரதி, ஸ்ரீதரன் (லண்டன்),  தயாநிதி (டென்மார்க்) தயாகரன் (லண்டன்),  தயாளினி, திலீபன், தர்சினி (லண்டன்) ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரனும் சுகிர்தா, கிருத்திகா ஆகியோரின்  மச்சானும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை (15.02.2020) சனிக் கிழமை 55 55 Rue Gince, Montreal Quebec H4N IJ7 இல் அமைந்துள்ள AETERNA Funeral Homeஇல் மாலை 6.00 மணியிலிருந்து இரவு 8.00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள்;; 16.02.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிமுதல் முற்பகல் 11.00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்;டு பிற்பகல் 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
கெருடாவில் தெற்கு,
 தொண்டைமானாறு

தகவல் :குடும்பத்தினர்
021 205 5747, 077 664 7951