துயர் பகிர்வு

சங்கரப்பிள்ளை திருநாவுக்கரசு

தோற்றம் : 1929-08-12

மறைவு : 2020-02-12


  • மரண அறிவித்தல்
நயினாதீவைப் பிறப்பிடமாகவும் நல்லூர் 113, பருத்தித்துறை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட   சங்கரப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் கடந்த (12.02.2020) புதன்கிழமை இறைபதமடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் ஏக புத்திரனும் காலஞ் சென்ற அன்னபூரணத்தின் அன்புக்கணவரும்  காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னம்மா தம்பதிகளின் மருமகனும் இராஜசேகரன் (இலங்கை) லோகநாயகி (கனடா),  தயாநிதி (லண்டன்), குணசேகரம் (சுவிஸ்), கலாரதி (இலங்கை), அற்புதராஜன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்  குணசிங்கம் (கனடா), குகேந்திரன் (லண்டன்), மதிவதனி (சுவிஸ்), சர்வானந்தன் (ஓய்வுநிலை ஆசிரியர்), சசித்திரா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் காலஞ்சென்றவர்களான நாகம்மா, கந்தசாமி, நித்தியானந்தன் மற்றும் சரஸ்வதி (கனடா), இளையதம்பி (அம்பாள் ஹாட்வெயர், நல்லூர்), லெட்சுமி (ஓய்வு நிலை ஆசிரியர்), இராசலிங்கம் (கனடா) ஆகியோரின் மைத்துனரும் காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் (ஓய்வுநிலை அதிபர்), கனகராசா, தனபாக்கியம் (ஓய்வுநிலை ஆசிரியர்) மற்றும் தில்லைநாயகி,பரராஜசிங்கம் (ஓய்வுநிலை எழுதுவினைஞர்), பத்மநிதி  ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும் கனடாவில் வசிக்கும்  காண்டீபன், ஜயத்ரா, ஜனுஷன் சுவிஸில் வசிக்கும்  யோகாகிம்  ஜனனி, கோபிகா,  ஜஸ்மினி இலங்கையில் வசிக்கும் மதனிகா, மதுஷிகா, கருணிகா கனடாவில்; வசிக்கும்  கிருஷன், கிருஷா ஆகியோரின் அன்புப் பேரனும் அதீஸ் (கனடா), அகினேஸ் (கனடா) ஆகி யோரின் அன்புப்பூட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (16.02.2020) ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகி மு.ப 9.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக கோம்பயன் மணல் இந்து மயானத் திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.
113, பருத்தித்துறை வீதி, நல்லூர்.