துயர் பகிர்வு

நடராசா தவேந்திரம் உத்தரவு பெற்ற கட்டட படவரைஞர், சோதிடர்

தோற்றம் : 1954-06-16

மறைவு : 2020-02-17


  • மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் தட்டாதெருவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா தவேந்திரம் நேற்று (17.02.2020) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நடராசா (சாஸ்திரி) பரமேஸ்வரி தம்பதிகளின் மகனும் காலஞ்சென்றவர்களான துரைராசா - செல்வரட்ணம் தம்பதிகளின் மருமகனும் பவானியின் கணவரும் கஜரீதன், ஜீவதாரணி ஆகியோரின் தந்தையும் காலஞ்சென்றவர்களான சாந்தகுமாரி ,  ஸ்ரீதேவி மற்றும் வசந்தகுமாரி கமலகுமாரி , ராஜவனி, சுபாசினி ஆகியோரின் சகோதரனும் ஸ்ரீரங்கனாத் ,  ஸ்ரீரவீந்திரன் ,  புஸ்பராணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (18.02.2020) செவ்வாய்க்கிழமை பி.ப 1.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில்  நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்துமயானத்திற்கு  எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் ,  உறவினர் ,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.