துயர் பகிர்வு

தாமோதரம்பிள்ளை மகேஸ்வரன்

தோற்றம் : 1934-09-09

மறைவு : 2020-02-20


  • மரண அறிவித்தல்
சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், முகாந்திரம் அவனியூ, மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை மகேஸ்வரன் கடந்த (20.02.2020) வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி தாமோதரம்பிள்ளை - சொர்ணம் தம்பதியினரின் புத்திரனும் காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும் பரமேஸ்வரியின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற நகுலேஸ்வரி, பரமேஸ்வரி (சிங்கப்பூர்), காலஞ்சென்ற கணேஸ்வரி, சோதீஸ்வரி (ஹட்டன்), லோகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் காலஞ்சென்ற வர்களான தியாகராசா, தில்லைநடராஜா, தேவராசா மற்றும் பவளக்கொடி, இலங்கா தேவி, இலங்கைநாயகி, செல்வநாயகி, யோகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் தர்மசேகர் (இலண்டன்), மதிவதனி, மதிசுதனி ஆகியோரின் பாசமிகு தந்தையா ரும் சிவசங்கரின் (கல்வித்திணைக்களம், வடமாகாணம்) அன்பு மாமனாரும் அபிசயன் (யா/ மானிப்பாய் இந்துக் கல்லூரி), அபிசயனி (யா/ உடுவில் மகளிர் கல்லூரி), ஆகிசன் (யா/ கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தாத்தாவுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (23.02.2020) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பிப்பிலி இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
தகவல்:-குடும்பத்தினர்.
தொலைபேசி இல- 077 777 5811, 021 225 5095
  
 
Attachments area