துயர் பகிர்வு

சங்கரப்பிள்ளை சின்னையா

தோற்றம் : 1934-12-18

மறைவு : 2020-02-23


  • மரண அறிவித்தல்

அனலைதீவு 3 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சங்கானையை வசிப்பிட மாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை சின்னையா கடந்த (23.02.2020) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை  - வள்ளியம்மை தம்பதிகளி;ன் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - சின்னாட்சி தம்பதிகளின் அன்புப்பேரனும் பத்மரத்தினம் அவர்களின் ஆருயிர் கணவரும், சித்திரா, கிருபாகரன், காலஞ்சென்றவர்களான  அரிகரன், சிவலோகினி, சுதாகரன் மற்றும் உதயச்செல்வி, சுதர்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் சிறிதரன், சமீரா, சதீஸ், முருகதாஸ் ஆகியோரின் பாசமிகு மாமாவும் தர்சன், சேய்டன், றேகான், கனா, சரோன்,  சகானா, மிதுன், மிதுனா ஆகியோரின் பாசமிகு பேரனும் சுப்பையா. தங்கம்மா, பூமணி, காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், சிவஞானம், ராசமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் செல்வலட்சுமி, செல்வராஜா, நவசிவாயம், சிவபுத்திரி, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (27.02.2020)  வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று  பூதவுடல் தகனக்கிரியைக்காக கரைச்சி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். 

 இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
அரசடிலேன், சங்கானை

தகவல்:- குடும்பத்தினர்
078 520 0750