துயர் பகிர்வு

பேணாட் டர்ஷன் தேவஞானேந்திரன் (பீடாதிபதி , விரிவுரையாளர் CORNERSTONE College of International Studies டுபாய்இ முன்னாள் வியாபார முகாமைத்துவ பாட இணைப்பாளரும் விரிவுரையாளரும்BCAS Campus Colombo முன்னாள் விரிவுரையாளர் American College of Higher Education, பகுதிநேர விரிவுரையாளர் British School of Commerce )

தோற்றம் : 1987-02-12

மறைவு : 2020-02-27


  • மரண அறிவித்தல்
 
யாழ்ப்பாணம் பழையபூங்கா வீதியை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமா கவும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பேணாட் டர்ஷன் தேவஞானேந்திரன் 27.02.2020 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேதநாயகம் தேவஞானேந்திரன் - மேரி ஜோசப்பின் (சந்திரா) தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான அருளப்பு – தங்கரட்ணம் மற்றும் வேதநாயகம் - மேரிதிரேசா ஆகியோரின் பாசமிகு பேரனும் ராஜன்-சாந்தி (ஹொலண்ட்), ஜெயா-லுசி (ஹொலண்ட்) ஆகி யோரின் அன்பு மருமகனும் ஜெயா-மரியதாஸ், றஞ்சி-ஆனந்தராசா, நிர்மலா-ஜெயராஜா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் இந்திரன் (ரு.மு) , ஜெகன், றெக்னோ (அமெரிக்கா), பவன் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் காலஞ் சென்ற பெர்னடெற், றெஜினா (அமெரிக்கா), மனுவலா (ரு.மு), வத்சலா (ரு.மு) ஆகியோரின் அன்பு மருமகனும் கிஷோ, மரியா, டினேஷ், மடோனா, டிலானி, வினோ, ஜெறோல்ட், ஜொஷேனா பிறேமி, யூட், ஆகியோரின் உடன்பிறவா சகோ தரனும்,சுபா,அல்றின்,ஜஸ்மினா,அருண் ஆகியோரின் மைத்துனரும் ஜொய் லின்,ஜெய்டன்,தக்ஷிதா ஆகியோரின் பாசமிகு மாமாவும் திரிஷிகாவின் பாசமிகு சிறிய தந்தையும் ஆவார்.
 அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக இல.32{16, அச்சக வீதி ஒழுங்கை, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரின் பெரிய தாயாரான ஜெயா மரியதாஸின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 04.03.2020 புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெறும் திருப்பலியின் பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்
ச.மரியதாஸ் - 077 078 1112, ஜெ.நிர்மலா - 077 729 7981
டினேஷ் - 077 949 8889,  வினோதன் - 076 630 0799