துயர் பகிர்வு

சுப்பிரமணியம் பத்மநாதன் (கதிர்) (Manager Estates - MAGPEK Agro Management Consultant Pvt Ltd) (முன்னாள் தலைவர் - ஸ்கந்தவரோதயாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், கொழும்பு)

தோற்றம் : 1943-02-22

மறைவு : 2020-03-06


  • மரண அறிவித்தல்
அம்பலவாணர் வீதி, உடுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் இல 6 1/2 & 6 1/3  Vaverset Place, Colombo - 06ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பத்மநாதன் நேற்று (06.03.2020) வெள்ளிக்கிழமை கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலணை பிறப்பு, இறப்பு பதிவாளர் இராசரத்தினம் - மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும், திருமதி ராஜேஸ்வரியின் ஆருயிர்க் கணவரும், Dr.அனுராதா (DMH கொழும்பு), ஆரணி (K.AIMS Business School Colombo-04/Jaffna), ரமணன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், Dr.தீனதயாளன் (NHSL), குமணன் (K.AIMS Business School Colombo-04/Jaffna) ஆகியோரின் அன்பு மாமனாரும் காலஞ் சென்ற பரமநாதன், பத்மாதேவி, நடேசன், காலஞ்சென்ற கமலாதேவி, பாலநாதன் (Kolanka Pvt.Ltd) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் காலஞ்சென்ற சிவநாதன், சோதிநாதன், மயூரநாதன், காலஞ்சென்ற சின்னத்தங்கம், பாலசிங்கம், பொன்மலர், மகாலிங்கம் மற்றும் காலஞ்சென்ற ஞானா ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
அன்னாரது பூதவுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் இன்று (07.03.2020) சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் 4.00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை (08.03.2020) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று 2.00 மணியளவில் பூதவுடல் பொறளை கனத்தை இந்துமயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக  எடுத்துச்செல்லப்படும். 
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.

011 258 9310, 011 236 0422