துயர் பகிர்வு

திருமதி பேபிசறோஜா துரைராஜா

தோற்றம் : 1943-02-04

மறைவு : 2020-03-04


  • மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பேபிசறோஜா துரைராஜா கடந்த (04.03.2020) புதன்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கனகர் துரைராஜா அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும் காலஞ்சென்றவர்களான கனகர் - மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும் சிறிகந்தராஜா (ஓய்வுபெற்ற நோய்க்காவித் தடுப்புப்பிரிவு மேற்பார்வையாளர் - யா.மா.ச), சிறிமோகன் (பொறியியலாளர் - லண்டன்), மீனா (லண்டன்), வாமதேவா (பொறியியலாளர் - கனடா), கோமளா (லண்டன்), காஞ்சனா (லண்டன்), சுதாகரன்; (பொறியியலாளர் - லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் சிவனேஸ்வரி, மகேஸ்வரி, காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரின்  அன்புச்சகோதரியும் தயாநிதி (ஆசிரியர் - யா{ சன்மார்க்க ம.வி, யா{ வண்.நாவலர் ம.வி), கிறிஸ்ரின் (லண்டன்), சிவக்குமார் (தொழிலதிபர் - லண்டன்), ராஜினி (கனடா), சரவணன் (வைத்திய நிபுணர் -லண்டன்), சரவணன் (சட்டத்தரணி - லண்டன்), சுதாஜினி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும் மதுஷாந்த் (கணினி விஞ்ஞான பீட மாணவன் - ஊவா வெல்லஸ பல்கலைக்கழகம்), விஜயஷாந்த் (மருத்துவபீட மாணவன் - யாழ் பல்கலைக்கழகம்),  தோமஸ் (கணிதமும் நிதியும் - லண்டன் பல்கலைக்கழகம்) ஜோசப் (உயர்தர மாணவன் - லண்டன்), மிதுனன் (மருத்துவ பீட மாணவன் - லண்டன் பல்கலைக்கழகம்), சானுகா (மருத்துவபீட மாணவி - லண்டன் பல்கலைக்கழகம்), சுரங்கா (மருத்துவபீட மாணவி - கனடா பல்கலைக் கழகம்),  சரோன் (சாதாரணதர மாணவன் - கனடா), ஹரினி (மருத்துவ பீடமாணவி-  லண்டன் பல்கலைக்கழகம்), ஹர்சினி (உயர்தர மாணவி - லண்டன்), ஆண்டுவன் (மருத்துவ பீட மாணவன் - லண்டன் பல்கலைக்கழகம்), ஸ்ருதி (உயர்தர மாணவி  - லண்டன்) விஷ்ணு (சாதாரணதர மாணவன் - லண்டன்). லக்ஸ்ணவி (மாணவி - லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள்; நாளை (08.03.2020) ஞாயிற்றுகிழமை காலை 10.30 மணியளவில்  அவரது இல்லத்தில்   நடைபெற்று  பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல்  இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்
377/1, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.