துயர் பகிர்வு

சிவபாக்கியவதி சாம்பசிவம்

தோற்றம் : 1940-12-10

மறைவு : 2020-04-05


  • மரண அறிவித்தல்

யாழ். மாரீசன்கூடல் இளவாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவபாக்கியவதி சாம்பசிவம் (05.04.2020) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சாம்பசிவத்தின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான சதாசிவம் சுந்தரி தம்பதியரின் ஏகபுத்திரியும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு திலகவதி தம்பதியரின் மருமகளும், காலஞ்சென்ற சிவலிங்கம் (முன்னாள் கணக்காளர் சண்முகம் அன் சன்ஸ்-வவுனியா) மற்றும் சுந்தரலிங்கம் (ஓய்வுநிலை M.L.T. திருகோணமலை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், சிறீபத்மாவதி (ஓய்வுநிலை அதிபர்) சற்குணராசா, நித்தியானந்தம் (கனடா), பாமினி (D.A சங்கானை) காலஞ்சென்ற சுதர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற விக்னேஸ்வரராசா (ஆசிரியர்) மற்றும் ஜெயந்தி (ஆசிரியை), கௌசியா (கனடா), சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும், டிஹான், கிருத்திகாயினி, விதிர்சிகன் யதுஷாயினி, ஷாணவி, ஷாருஹி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (06.04.2020) திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மாரீசன்கூடல் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.