துயர் பகிர்வு

துரையப்பா அரியரட்ணம் (ஓய்வுபெற்ற கணக்காளர் - மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்)

தோற்றம் : 1001-01-01

மறைவு : 2020-04-22


  • மரண அறிவித்தல்

பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், நீராவியடி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா அரியரட்ணம் (ஓய்வுபெற்ற கணக்காளர் - மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்) நேற்று (22.04.2020) புதன்கிழமை இறைபதம் எய்தியுள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான துரையப்பா நவமணி தம்பதியினரின் அன்பு புதல்வனும் காலஞ்சென்ற சிவமலர் அவர்களின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான பொன்னுத் துரை - ஞானவல்லி தம்பதியினரின் அன்பு மருமகனும் திலீபன் (U.K), Dr. நிருபா (போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும் நிவேதிகா (U.K), Dr.க.உமாசங்கர் (ஆதார வைத்தியசாலை, தெல்லிப்பளை) ஆகியோரின் அன்பு மாமனாரும் மிருணாளினி, பிருந்தன், லக்ஷ்மி (U.K), அபிஷா, அபினாஷ் ஆகியோரின் அன்பு பாட்டனாரும் இராசரத்தினம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று (22.04.2020) புதன்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கோம்பயன்மணல் இந்துமயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:குடும்பத்தினர்.
37/3, சிவகுருநாதர் ஒழுங்கை, பிறவுண் வீதி, நீராவியடி, யாழ்ப்பாணம்.