துயர் பகிர்வு

வல்லிபுரம் நாகேந்திரம் (ஓய்வுபெற்ற பிரதம எழுதுவினைஞர், மாவட்ட செயலகம்-யாழ்ப்பாணம்.)

தோற்றம் : 1931-09-27

மறைவு : 2020-04-24


  • மரண அறிவித்தல்

அளவெட்டியை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் நாகேந்திரம் (ஓய்வுபெற்ற பிரதம எழுதுவினைஞர்) கடந்த (24.04.2020) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தங்கம்மா தம்பதியரின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி மங்கையற்கரசி தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற விமலாதேவியின் அன்புக் கணவரும், அம்பிகைபாலா (U.K), கௌரிசங்கர், ஸ்ரீஸ்கந்தா (மக்கள் வங்கி பிராந்திய முகாமையாளர், மட்டக்களப்பு), முருகன் (RB Electronics) ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவஜனனி (U.K), கீதாஞ்சலி கார்த்திகா (அபிவிருத்தி உத்தியோகத்தர் RDHS Office, Jaffna) ஆகியோரின் அன்பு மாமனாரும், ஆதிகஜன் (U.K), ஜெனிஷா, அஸ்வின், சோபனா ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி, கண்ணகை அம்மா, நாகேஸ்வரி, சரஸ்வதி, நடராசா, புஷ்பவதி ஆகியோரின் அன்புச் சகோதரனும், நீலாயதாட்சி, காலஞ்சென்ற கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் (26.04.2020) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
52/6-3, உடையார் ஒழுங்கை,
பழம் வீதி, கந்தர்மடம்.
077 2696646, 0779236931