துயர் பகிர்வு

திருமதி திருமகள் கணபதிப்பிள்ளை (வேலணை கிழக்கு - 1 ஆம் வட்டாரம்)

தோற்றம் : 1933-12-15

மறைவு : 2020-04-28


  • மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு-1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாக வும், 107{3, கச்சேரி நல்லூர் வீதி, நல்லூர் தெற்கு, யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி திருமகள் கணபதிப்பிள்ளை நேற்று (28.04.2020) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா-ஆச்சிப்பிள்ளை தம்பதியரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா-நாகமுத்து தம்பதியரின் அன்பு மருமகளும், கணபதிப்பிள்ளையின் அன்பு மனைவியும், அருட்செல்வி (ஓய்வுநிலை சிரேஷ்ட தாதிய விடுதிச் சகோதரி,யாழ் போதனா வைத்தியசாலை, தாதிய சேவையில் மீள் நியமனம் பிரதேச வைத்தியசாலை,அனலைதீவு), சிவநாதன் (ஓய்வுநிலைத் தபால் திணைக்கள ஊழியர்,வேலணைத் தபால் நிலையம்), பிரணவநாதன், அருள்வாணி ஆகியோரின் அன்புத் தாயாரும், ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் க.கணபதி (தீவகக் கல்வி வலயம்), ரவீந்திரராணி, சிறிஸ்கந்தராசா ஆகியோரின் அன்பு மாமியாரும், னுச.தசாகன், தசானுசன் (மென்பொறியியலாளர்), சிவடிலூஜினி (யாழ் பல்கலைக்கழகம் 2ம் வருட மாணவி), பவஷாயினி (வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, உயர்தர வகுப்பு மாணவி 2021), சிறிசாயினி (யா{திருக்குடும்ப கன்னியர் மடப் பாடசாலை), சாயீஷன் (யாழ். மத்தியக் கல்லூரி) ஆகியோரின் பேர்த்தியும், நாமகள், காலஞ்சென்றவர்களான நடராசா (விஞ்ஞானி), கருணாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (29.04.2020) புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைக்காக பூதவுடல் செம்மணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
107{3, கச்சேரி நல்லூர் வீதி,
நல்லூர் தெற்கு, யாழ்ப்பாணம்.
077 868 9678இ 021 222 5607