துயர் பகிர்வு

பொன்னன் குணரத்தினம்

தோற்றம் : 1936-08-13

மறைவு : 2020-05-04


  • மரண அறிவித்தல்

புத்தூரைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் மத்தியை வசிப் பிடமாகவும் கொண்ட பொன்னன் குணரத்தினம் (ஓய்வு பெற்ற முதுநிலை கணக்காளர்) நேற்று (04.05.2020) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னன்-மீனாட்சி தம்பதியரின் மூத்த புத்திரனும், விநாயகமலரின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான காங்கேசு-கண்மணி தம்பதியரின் மருமகனும், அன்பரசி (தொழில்நுட்பவிய லாளர்), கலையரசி (பொறியியலாளர்-கண்டி), திருக்குமரன் (முதுநிலை விரிவுரையாளர்-யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்), ஞானக்குமரன் (ஊடகவியலாளர்), எழிலரசி ஆகியோரின் அன்புத் தந்தையும், வாசுதேவன் (பொறியியலாளர்), குணசிங்கம் (பொறியியலாளர்), தயாநிதி (ஆசிரியர், கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி), சுகிர்தா ஆகியோரின் அன்பு மாமனும், யதுசன், கோசிகன், பிரபாத், பிரவீன், தேஜஸ்வினன் (யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி), சாதனா, சாளினி, ஆர்த்திகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (05.05.2020) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக கோப்பாய் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
மகன்-கு.திருக்குமரன்
0777 910 654
8th km post,
பருத்தித்துறை வீதி,
கோப்பாய் மத்தி.