துயர் பகிர்வு

சண்முகநாதன் சத்தியவரதன்

தோற்றம் : 1961-05-27

மறைவு : 2020-04-03


  • மரண அறிவித்தல்

சண்முகநாதன் சத்தியவரதன்
இணுவில் மேற்கை பிறப்பிடமாகவும், சுவிஸ் (Zurech) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சத்தியவரதன் (சந்திரன்) கடந்த (30.04.2020) வியாழக்கிழமை சுவிஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் புஸ்பலீலாவதி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கருணானந்தன் மற்றும் மகேஸ்வரி தம்பதியரின் மருமகனும் அன்பரசியின் அன்புக் கணவரும், கஸ்தூரியின் அன்பு தந்தையும், சத்தியச்செல்வி (சாந்தா), அருள்வரதன் (சத்தியன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்றவர்களான கணேசரட்ணம், அரியராசா மற்றும் செல்வராசா, மகேஸ்வரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும், இராசமணி, சிவயோகமணி ஆகியோரின் பெறாமகனும், ரவீந்திரநாதன், விஜயலக்சுமி ஆகியோரின் மைத்துனரும், ரஜிதரன், ரஜீவன், ரஜிப்பிரியன், ரஜிந் ஆகியோரின் அன்பு மாமனாரும், ஹஜர்றாஜ், கஜராகினி, கஜராம் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (05.05.2020) செவ்வாய்க்கிழமை சுவிஸ் (Zurech) இல் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
'சத்தியகிரி',
செட்டி லேன், இணுவில் மேற்கு.
T.P: 077 624 8930, 077 258 5121