துயர் பகிர்வு

முத்துவேலு சண்முகநாதன்

தோற்றம் : 1934-11-21

மறைவு : 2020-05-09


  • மரண அறிவித்தல்

முத்துவேலு சண்முகநாதன் (தவம் (J.P) முன்னாள் றசவை உடையார் வட்டுக்கோட்டை, முன்னாள் சமாதான சபை உறுப்பினரும், முன்னாள் வட்டுக்கோட்டை தென்மேற்கு கிராம அபிவிருத்திச் சங்க ஸ்தாபகரும், தலைவரும் வட்டுத்தென்மேற்கு (J/166) வட்டு இளைஞர் அபிவிருத்திக் கழக ச.ச. நிலைய பெருந் தலைவர் (போஷகர்), முன்னாள் வட்டுத் தென்மேற்கு விவசாய சம்மேளனத் தலைவரும், பிரபல சமூக சேவையாளரும்

முத்துவேலு சண்முகநாதன்

வலிமேற்கு வட்டுக்கோட்டை தென்மேற்கு அற்கின்சன் வீதி, உணனை விழானை வளவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்துவேலு சண்முகநாதன் நேற்று (09.05.2020) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற அருணாசலம் முத்துவேலு (Clerk of Wortes Malaysia) நீலாய தாஷசி அம்மா தம்பதியரின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான ஆ.நகுலாம்பிகை, நா.ஞானாம்பிகை, செல்வி கனகாம்பிகை ந.கமலாம்பிகை, அ.இரத்தினாம்பிகை ஆகியோரின் அன்புத் தம்பியும், காலஞ்சென்றவர்களான பூ.வைத்தியநாதன், டாக்டர் பூ.கைலாயநாதன், டாக்டர் திருமதி த.மனோரஞ்சிதம், ஸ்ரீ.குணரத்தினம் ஆகியோரின் பாசமிகு ஒன்றுவிட்ட சகோதரனும், காலஞ் சென்றவர்களான தா.சிவகுருநாதன், இரட்ணாவதி, தா. இராசா (பெருனமனார்) இரட்ணாவதி, தா.இராசாமுத்தம்மா, தா நவரட்ணராசா, வள்ளியாச்சி  அவர்களின் அன்பு மருமகனும், டாக்டர் கமலாயதாட்ஷி அம்மாவின் பெறா மகனும், இராஜலட்சுமியின் (இராசாத்தி) பாசமிகு கணவரும், கணேசகுமார் (France) சரவணபவன் (Canada), ஜெயபவன் கௌரி (U.K), சிவநாதன் பவானி (U.K) ஸ்ரீபரன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்பு அப்பாவும், சயந்தி ஜெயபவன், சிவநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும், பிரசன்னா சிவகரன், பிரீத்தி, சூர்யா, மதுசன், சுவேத்தா, திலக்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (10.05.2020) ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக வட்டுக்கோட்டை கொத்தத்துறை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்டும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: மனைவி, மக்கள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

அற்கின்சன் வீதி, வட்டுக்கோட்டை.