துயர் பகிர்வு

திருமதி நவமணி வேலுப்பிள்ளை (ஓய்வுபெற்ற ஆசிரியை)

தோற்றம் : 1932-02-02

மறைவு : 2020-05-28


  • மரண அறிவித்தல்

கோப்பாயை பிறப்பிடமாகவும், ஆவரங்காலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நவமணி வேலுப்பிள்ளை நேற்று (28.05.2020) வியாழக்கிழமை சிவபதம் அடைந்து விட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரவநாதன் தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற வைரவநாதன் வேலுப் பிள்ளையின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, தர்மலிங்கம் மற்றும் சிவபாக்கியம், வேதநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரி யும், பாலேந்திரா (கனடா), நாகேந்திரா, இராஜேந்திரா (மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்- நல்லூர்), குபேந்திரா (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், மகாலக்ஷ்மி (கனடா), சிவாஜினி, சறோஜினிதேவி (கனடா) ஆகியோரின் அருமை மாமியாரும், தேவகி (கனடா), மகரன் (கனடா), கிஷோர், கானப்பிரியா, பானுஷா (கனடா), பவித்திரா (கனடா) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (29.05.2020) வெள்ளிக்கிழமை மு.ப. 10.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைக்காக ஆவரங்கால் கரதடி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
வே.இராஜேந்திரா (மகன்)
சிவன் வீதி, ஆவரங்கால்,
புத்தூர்.
தொ.இல: 021 205 8077, 077 226 3560