துயர் பகிர்வு

நமசிவாயம் மதிவதனன் ஆலோசகர்: மேக்கன்ரைல் பாதுகாப்புச் சேவை தனியார் நிறுவனம் முன்னாள் வலய முகாமையாளர் - Allianz Insurance, Union Assurance PLC

தோற்றம் : 1001-02-01

மறைவு : 2020-05-31


  • மரண அறிவித்தல்

கைதடி நுணாவில், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சிவன் கோயிலடி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் தற்பொழுது மட்டுவில் தெற்கு, சாவகச்சேரியில் வசித்து வந்தவருமான நமசிவாயம் மதிவதனன் கடந்த (31.05.2020) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற நமசிவாயம் - இராஜேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சிங்கபாகு காந்திமதி தம்பதியரின் அன்பு மருமகனும் செல்வராணியின் (ஜேர்மனி) அன்புக் கணவரும், டனுஷ்கர் (ஜேர்மனி), டக்ஷாயினி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும் நிர்மலாவின் (இந்தியா) அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (02.06.2020) செவ்வாய்க் கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் குச்சப்பிட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
வி.சுகுமாரன்.
கிராஞ்சி லேன்,
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி.
தொ.இ: 0777730597.