துயர் பகிர்வு

வேலுப்பிள்ளை சிவபாதமணி

தோற்றம் : 1001-01-01

மறைவு : 2020-06-08


  • மரண அறிவித்தல்
நயினாதீவு 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பழங்கிணற்றுப் பிள்ளையார் கோவில், கலாசாலை வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவபாதமணி நேற்று (08.06.2020) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற நாகலட்சுமியின் பாசமிகு கணவரும் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - பொன்னம்மா தம்பதியினரின் மகனும் காலஞ்சென்றவர்களான முத்தையா - பூரணம் தம்பதியினரின் மருமகனும் பாலகௌரி (சுவிஸ்), இளங்கோவன் (பிரான்ஸ்), சோபனா (ஆசிரியை - யாழ் இந்து மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும் வசந்தகுமார் (சுவிஸ்), வளர்மதி (பிரான்ஸ்), குலத்துங் கன் (பெரும்பாக  உத்தியோகத்தர், கமநலசேவை நிலையம், சண்டிலிப்பாய்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் பிந்துஜா, கோகுல்ஷியாம், பிரவீன், அபிஷா, வித்தகன், அங்கவி ஆகியோரின் அன்புப் பேரனும் காலஞ்சென்ற திருநாவுக்கரசு மற்றும் வடிவாம் பிகை, ஞானப்பூங்கோதை ஆகியோரின் பாசமிகு சகோதரரும் காலஞ்சென்ற கதிர்காம நாதன் மற்றும் முத்துலட்சுமி, யோகலட்சுமி ஆகியோரின் மைத்துனரும் பரமேஸ்வரி, தில்லைநாதன் காலஞ்சென்ற நந்தகுமார் மற்றும் சரஸ்வதி, காலஞ்சென்ற கனகசபை மற்றும் இரத்தினசபாபதி ஆகியோரின் சகலருமாவார்.
  அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (09.06.2020) செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக் காக திருநெல்வேலி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்;: குடும்பத்தினர்
பழங்கிணற்றுப் பிள்ளையார் கோவிலடி,
கலாசாலை வீதி,
திருநெல்வேலி.