துயர் பகிர்வு

இரத்தினசபாபதி சண்முகராசா (ஓய்வுபெற்ற நுலகர்-யாழ் மாநகர சபை, பொது நூலகம்)

தோற்றம் : 1933-08-14

மறைவு : 2020-07-14


  • மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி சண்முகராசா நேற்று (14.07.2020) செவ்வாய்க் கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி-சரஸ்வதி தம்பதியரின் ஏகப்புதல்வனும், காலஞ்சென்றவர்களான கோபாலசாமி-ஈஸ்வரி தம்பதியரின் மருமகனும், காலஞ்சென்ற நாகேஸ்வரியின் அன்பு கணவரும், வனிதா (பிரான்ஸ்), தயாநிதி, தயாளினி, தக்ஷினி, ராஜகோபால் (பிரான்ஸ்), கஜமுகன், மதுசூதனன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற சியாமா சுந்தர் (பிரான்ஸ்), ஜானகிராமன், காலஞ்சென்ற சௌந்தரசிங், வீரசேகரம், சுரேகா (பிரான்ஸ்), ஜெயமதி, தனுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும், இலக்கியா, ஓவியா, காவியா, தாரிணி, நரேந்திரன், மாதங்கி, மிலக்ஷா, பவித்திரா, அபிராமி, தனுஷன், இந்துமதி, வினித்தா, மதுரன், சைந்தவி, சஞ்ஞனா, குருபரன், கிஷானி, கிரியா, கிஷாலினி, தயாபரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (15.07.2020) புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
303, நாவலர் வீதி,
ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம்.
077 669 1309