துயர் பகிர்வு

அலோசியஸ் மனோகரன்

தோற்றம் : 1949-07-23

மறைவு : 2020-07-26


  • மரண அறிவித்தல்

நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பெரியவிளான், கனடாவை வசிப்பிடமாக வும் கொண்ட அலோசியஸ் மனோகரன் கடந்த (26.07.2020) ஞாயிற்றுக் கிழமை கனடாவில் காலமானார்.
அன்னார் அலோசியஸ் - லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அந்தோ னிப்பிள்ளை - திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், அன்னமேரி    யின் அன்புக் கணவரும், அஜந்தன் (கனடா), சுமண்றாஜ் (ஆசிரியர் - புனித பத்திரிசியார் கல்லூரி), சாளினி (கனடா) ஆகியோரின் தந்தையும், காலஞ் சென்ற ஜெயசீலன், றாஜினி, காலஞ்சென்ற எட்மன், றஞ்சினி (ஜேர்மனி) மற்றும் காலஞ்சென்ற சுபோதினி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஜெனி சியாமளா (கனடா), விஜிதா (ஆசிரியர் - மிருசுவில் அ.த.க பாடசாலை), ஜெசி கரன் (கனடா) ஆகியோரின் மாமனாரும், டெவின், றெஷ்னி, றியான், அற்ராறா, எயிற்றன், அகரன் ஆகியோரின் பேரனும் கமில்ரனின் பெரிய தகப்பனும்  றிச்சியாவின் (ஜேர்மனி) மாமனும் நாதன், சந்திரன், ஜேமணி ஆகியோரின் மைத்துனருமாவார்.
அன்னாரது அடக்க நிகழ்வுகள் கனடா ரொரன்ரோவில் இடம்பெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
மகன்- (071 767 5529), சகோதரி- (076 998 3524)