துயர் பகிர்வு

வேலுப்பிள்ளை இராசா (புகையிரத பயணச்சீட்டு பரிசோதகர்)

தோற்றம் : 1930-12-30

மறைவு : 2020-08-25


  • மரண அறிவித்தல்

மயிலிட்டி வடக்கு காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் மாகியப்பிட்டி சண்டிலிப் பாயை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இராசா நேற்று (25.08.2020) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ்சென்ற தங்க ரத்தினத்தின் பாசமிகு கணவரும் காலஞ்சென்ற வர்களான கந்தப்பிள்ளை  - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும் தங்கராசா (கனடா), இராசலட்சுமி (ராணி), தேவி, நாகேஸ்வரி, சிவமலையநாதன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகுதந்தையும் ஜெயராணி (கனடா) கந்தசாமி, காலஞ்சென்ற வரத ராசா மற்றும் கண்ணன், ஜெயராணி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, தம்பிராசா, இராசம்மா, முத்துப்பிள்ளை, இராசமணி மற்றும் குஞ்சு (மன்னார்), நடராசா (மன்னார்), கனகலட்சுமி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் கனடாவை சேர்ந்த கிருஸ்ணகுமாரி, தர்ஷன், லெனின்மார்க் ஜோண்சன்-தர்ஷனா மற்றும்  இராஜசேகரன்- வர்ஷிகா, குணசேக ரன்- மைதிலி,லைவுறு- அனுராதா (லண்டன்) , விஜயகோபி- அனுசியா (அபிவிருத்தி உத்தியோகத்தர் உடுவில் பிரதேச செயலகம்) வ.ராஜரூபன் (ஆசிரியர்-யா/நயினாதீவு மகாவித்தியாலயம்), வினோதினி, பிரசாந் தினி, வினோத், அசோக், றமேஸ், கரன்- தர்ஷிகா (சமாதான நீதவான்)  மற்றும் லண் டனை சேர்ந்தவர்களான மதன், நிவாஷி ஆகியோரின் பேரனும் கனடாவைச் சேர்ந்தவர்களான விதுஷன், தனுஷன், ருகிஷன், வைஷ்ணவி மற்றும் ரோகித், கஜோனா, சத்ஜன், வைஷ்ணவி, சஷ்மிகா, ஷாசந், ஜனுயன் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (26.08.2020) புதன்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொட்டுப்பனை இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்