துயர் பகிர்வு

மாணிக்கம் சண்முகநாதன் (பவா) (சமாதான நீதவான் - J.P)) (இயக்குனர்-புதிய உயர்கல்லூரி, ஆரியகுளம் சந்தி, யாழ்ப்பாணம்)

தோற்றம் : 1954-03-08

மறைவு : 2020-09-26


  • மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு ஏழாலையை பிறப்பிடமாகவும் சங்கரப்பிள்ளை வீதி, ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சண்முக நாதன் கடந்த (26.09.2020) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற மாணிக்கம் அன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசரத்தினம் விஜயலக்ஷ்மி தம்பதியரின் அன்பு மருமகனும், அருள்நங்கை (விரிவுரையாளர் இந்து நாகரிகம்) அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற சந்துதன் மற்றும் தேவசந்துதன், தேவசாத்வீகன் (ஏஞ்சல் சர்வதேச ஆங்கில பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற சிவமணி (சிங்கள, ஆங்கில ஆசிரியர்) மற்றும் இராமச்சந்திரன், காலஞ்சென்ற இரத்தினசிங்கம் மற்றும் திலகமணி, செல்வராசா (புதிய உயர் கல்லூரி), பத்மநாதன் (இயக்குனர் பொருளியற் கல்லூரி யாழ், இணுவில், BARATHI  கல்வி நிலையம்- சித்தன்கேணி), மோகனா ஆகியோரின் பாசமிகு சகோதரனும், பாலபாஸ்கரன் (புதிய உயர் கல்லூரி), கமலாம்பிகை (பிரான்ஸ்), காலஞ்சென்ற அருள்வேல் மற்றும் இராஜநங்கை (ஆசிரியர், யா/ மெமோறியல் ஆங்கிலப் பாடசாலை) காலஞ்சென்ற செந்தில்குமார், காலஞ்சென்ற சுந்தர லிங்கம் மற்றும் ஞானக்கொழுந்து (ஓய்வுபெற்ற ரெலிக்கொம் பணியாளர்), காலஞ்சென்ற நவமணி மற்றும் நவமணிதேவி, வசந்தராணி, சகிலா (ஓய்வு பெற்ற கொமர்ஷல் வங்கி உத்தியோகத்தர்), இராகினி ஆகியோரின் மைத்துனரும், செல்வரஞ்சன் (பிரான்ஸ்), சிவபாலன் ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (29.09.2020) செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் காக்கைதீவு, கரையான்பிட்டி இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
‘லக்ஸ்மி’
சங்கரப்பிள்ளை வீதி,
ஆனைக்கோட்டை.
தகவல்:
ளு.அருள்நங்கை -மனைவி
(புதிய உயர்கல்லூரி விரிவுரையாளர்)
021 225 5607