துயர் பகிர்வு

நடராசா குணநாதன் (குணம், மருமகன்)

தோற்றம் : 0001-01-01

மறைவு : 2020-10-03


  • மரண அறிவித்தல்
ஐயனார் கோயிலடி, கல்வயல் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா குணநாதன் கடந்த (03.10.2020) சனிக்கிழமை கனடாவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற நமசிவாயம் நடராசா மற்றும் சிவக் கொழுந்து தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரசிங்கம் மற்றும் தர்மலட்சுமி தம்பதியரின் அன்பு மருமகனும், கனடாவை வசிப்பிடமாக கொண்டவர்களான யமுனாவின் பாசமிகு கணவரும், துவாரகன், துஷ்யந்தன் துவாரகா, துஷ்யந்தி, நிர்மலன் ஆகியோரின் அன்புத் தந்தையாரும், மெலிசா, நிஷாந்தி, ராம்தாஸ், கபிலன் ஆகியோரின் அன்பு மாமனாரும், அக்ஷரா, அர்ஜூன், ராஜா ஆகியோரின் அன்பு பேரனும், ஈஸ்வரி (யாழ்ப் பாணம்), காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் சறோஜினி, பேரின்பநாதன், ரங்கநாதன் காலஞ்சென்ற வசந்தினி ஆகி யோரின் அன்புச் சகோதரனும், பரமானந்தன் (யாழ்ப்பாணம்), வேலாயுதபிள்ளை சைலஜா, நிகிலா, பாபு, கண்ணன், நரேஷ் சுஜாதா, கீர்த்திகா, விஜிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (07.10.2020) புதன் கிழமை காலை 9.00 மணிக்கு St.John’s Dixie Cemetery & Crematorium Mississauga Canada மலர்ச்சாலையில் நடைபெற்று, தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
தகவல்:
குடும்பத்தினர். 

ஐயனார் கோயிலடி,
கல்வயல், சாவகச்சேரி.