துயர் பகிர்வு

சின்னத்தம்பி செல்வராசா

தோற்றம் : 1951-09-16

மறைவு : 2020-10-15


  • மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு முதலாம் வட்டாரம் சாட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி செல்வராசா நேற்று (15.10.2020) வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சரவணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், பூமணி, பாலசிங்கம், ஆகியோரின் அன்புச் சகோதரனும், செல்வராணியின் பாசமிகு கணவரும், கிருசாந்தி, பிரதீபன் (சுவிஸ்), பிரதீசன், சர்மிளா, பிரசாத், ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும், திவாகரன், சசுனா (சுவிஸ்), துர்சிகா, உதயகுமார், டிலேனியா ஆகியோரின் அன்பு மாமனாரும், வீரசிங்கம், சரோஜினிதேவி, சிவபாக்கியம் (அவுஸ்ரேலியா), செல்வநாயகம் (சுவிஸ்), மனோகரன், மகேந்திரன் (டென்மார்க்), புஸ்பராணி, சாந்தகுமாரி, விஜயகுமாரி,  தமிழ்ச்செல்வி (ஜேர்மன்), ஜெயசீலன் (கனடா), ஆகியோரின் அன்பு மைத்துனரும், சாக்ஸ்சியா, தருன், சுயானுஜா, சுஜாந், கவிசாந், றியானிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (16.10.2020) வெள்ளிக்கிழமை காலை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் பூதவுடல் சாட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:குடும்பத்தினர்
077 583 2154