துயர் பகிர்வு

தனபாலசிங்கம் புத்திரசிங்கம் ( இளைப்பாறிய விஞ்ஞான மற்றும் உயிரியல் ஆசிரியர்-யாழ்.மத்திய கல்லூரி,யாழ்.வைத்தீஸ்வராக் கல்லூரி, முன்னாள் கல்வி விரிவுரையாளர்-நைஜீரியா மற்றும் உயிரியல் விஞ்ஞான வினாவிடை புத்தகங்களின் நூலாசிரியர் )

தோற்றம் : 1928-10-08

மறைவு : 2020-10-13


  • மரண அறிவித்தல்
 
மலேசியாவை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத்தெரு, நைஜீரியா மற்றும் பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் புத்திரசிங்கம் அவர்கள் 13.10.2020 செவ்வாய்க்கிழமை அன்று இங்கிலாந்தில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம் - அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான குலசிங்கம் - நாகரெட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும் மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், சிவநங்கை(லண்டன்), சிவசங்கர்(லண்டன்),சிவப்பிரியா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், சாதனா(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும், விஷாலா, அனன்யா, சீதல், சுவேதா ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான விமலசிங்கம், குமாரசிங்கம் மற்றும் பவானி, சறோஜினிதேவி, அருந்ததி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சண்முகலிங்கம் காலஞ்சென்ற தனபாலசிங்கம் மற்றும் உருத்திரராஜா, பாலேஸ்வரி,காலஞ்சென்ற இராமசந்திரன் ஆக்யோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27.10.2020 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் இந்து முறைப்படி பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் : Dr.சிவநங்கை புத்திரசிங்கம்.
(+447545501392)