துயர் பகிர்வு

மயில்வாகனம் பத்மநாதன்(ஓய்வுபெற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக உடற்கல்வி போதனாசிரியரும்,பலாலி ஆசிரியர் கலாசாலை உடற்கல்வி விரிவுரையாளரும்)

தோற்றம் : 1937-11-26

மறைவு : 2020-11-30


  • மரண அறிவித்தல்
வசாவிளானை பிறப்பிடமாகவும், உடுவில் பிரதேச செயலக வீதி, சுன்னாகத்தை வசிப்பிட மாகவும் கொண்ட மயில்வாகனம் பத்மநாதன் நேற்று (30.11.2020) திங்கட்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் வயாவிளானை சேர்ந்த காலஞ்சென்றவர்களான மயில்வாகனம்-சாவித்திரி தம்பதியரின் சிரேஸ்ட புதல்வரும், புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த காலஞ்சென்ற வர்களான முன்னை நாள் சுகாதார போதனாசிரியரும் பாடநூல் எழுத்தாளருமான தர்மலிங்கம் பரமேஸ்வரி தம்பதியரின் அன்பு மருமகனும், விஜயராணியின் அன்புக் கணவரும், ரஜனி, கரிகரன், காலஞ்சென்ற மயூரன் (பவாணன் {கெனடி) மற்றும் லிங்கரன், சுதாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், டேவிட், பத்மலோஜினி ஆகி யோரின் அன்பு மாமனாரும், பிலிசியா, டிலோரன்ஸ், ஜொஹானி, வலன்சியா ஆகி யோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி சத்தியநாதன் மற்றும் மகேஸ்வரி, ஞானேஸ்வரி, நிர்மலேஸ்வரி, ஜெகநாதன் யோகேஸ்வரி, ராஜேஸ்வரி, வித்தியேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தற்பரநாதன், சுரேந்திரநாதன் ஆகியோரின் அன்பு சகோதரரும், காலஞ்சென்ற வைத்திய கலாநிதி இந்திராணி மற்றும் லோகராணி, யோகராணி, சண்முகதாசன் (ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர்), யுகேந்திரராசா, நந்தகுமாரன் (ஆசிரியர் சென் ஜோன்ஸ் கல்லூரி), காலஞ்சென்றவர்களான சிறீஸ்கந்த ராஜா, தயாபரன், முரளிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (01.12.2020) செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக நண்பகல் 12.00 மணியளவில் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப் படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
மனைவி-விஜயராணி
0761043118,0772930212
மைத்துனர்-த.நந்தகுமாரன்
077 129 8159
உடுவில்
பிரதேச செயலக வீதி,
சுன்னாகம்.
 
 
 
 
Attachments area