துயர் பகிர்வு

கோவிந்தசாமி சண்முகராஜா

தோற்றம் : 1951-04-10

மறைவு : 2020-11-30


  • மரண அறிவித்தல்

தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், பிளாக் றோட், சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தசாமி சண்முகராஜா நேற்று (30.11. 2020) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கோவிந்தசாமி குணரத்தினம்மா தம்பதியரின் மூத்த மகனும், காலஞ்சென்ற திலகவதியின் கணவரும், சிறிறஞ்ஜனி (மருந்தாளர், ஊயசபடைள குழழனஉவைல-கன்னாதிட்டி), சிறிசத்தியா, சிறிதுர்க்கா கரன் (ர்நடடழ Phழநெ ளூழி சங்கானை), சிறிவிஷ்ணுகரன் (ர்யிpல Phழநெ ளாழி சங்கானை) ஆகியோரின் அன்புத் தந்தையும், அமுதகரன், கிளைமன் ஜெயராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும், துவாரகன், துவாரகா, அபினாஷ், ஆகியோரின் அன்புப் பேரனும், யோகராணி, கமலாதேவி, காலஞ்சென்ற சிவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரனும், இராஜ மனோகரன், இரங்கநாதன், மகாலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்து னரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (01.12.2020) செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக கரைச்சி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
பிளாக் றோட், சங்கானை.