துயர் பகிர்வு

திரு. கந்தன் பிள்ளையான்

தோற்றம் : 1940-04-26

மறைவு : 2020-12-05


  • மரண அறிவித்தல்
 
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தன் பிள்ளையான் நேற்று (05.12.2020) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தன்-கதிரி தம்பதியரின் இளைய மகனும், காலஞ்சென்ற சிவபாக்கியத்தின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான நல்லான்-நன்னி தம்பதியரின் மருமகனும், காலஞ்சென்றவர்களான சின்னம்மா, பொன்னர், மாணிக்கர், கிட்டினர் மற்றும் செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்றவர்களான தவசி, பாறி, சின்னத்தம்பி ஆகியோரின் மைத்துனரும், ருவேந்திரா (விவசாய சம்மேளன செயலாளர்), சேனாதிராஜா (நியூசிலாந்து), சுகந்தினி (ஆசிரியை, யா{புத்தூர் மெ.மி.த.க. பாடசாலை), தயேந்திரன் (மாவட்ட சமூர்த்தி கண்காணிப்பு முகாமையாளர், மாவட்ட செயலகம், முல்லைத்தீவு), விஜிதரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், பாமினி, கனகாம்பிகை (நியூசிலாந்து), அருமைத்துரை (உளவளத்துணை உத்தியோகத்தர் பிரதேச செயலகம், தெல்லிப்பளை), சர்மிளா (அபிவிருத்தி உத்தியோகத்தர் நகரசபை, பருத்தித்துறை) ஆகியோரின் அன்பு மாமனாரும், கிஷோரன், சஞ்ஜீத்தனன், சிரஞ்ஜீத்தனன், சாகித்தியா, அஜீத்தனன் சேனுஜன், சாருஜன், தார்மீகனன், சகீர்சனன், அக்ஷியானி, கஜீனா  ஆகி யோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (06.12.2020) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரியைக்காக சிறுப்பிட்டி தெற்கு காளையம்புலம் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
மகன்-பி.ருவேந்திரா (0776258785)
மகன்-பி.தயேந்திரன் (0774726781)
சிறுப்பிட்டி மேற்கு,
நீர்வேலி.