துயர் பகிர்வு

திரு.கார்த்திகேசு நடராஜா (K.K.நடராஜா) (ஓய்வுபெற்ற அதிபர் காரைநகர் இந்துக் கல்லூரி, வட்டு இந்துக் கல்லூரி, காரைநகர் யாழ்ரன் கல்லூரி, சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி

தோற்றம் : 1929-07-07

மறைவு : 2020-12-17


  • மரண அறிவித்தல்
 
காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும் கந்தர்மடத்தை வதிவிடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற அதிபர் திரு. கார்த்திகேசு நடராஜா அவர்கள் நேற்று (17.12. 2020) வியாழக்கிழமை காலமனார்.
அன்னார் காலஞ்சென்ற கமலாவதியின் (ஓய்வுபெற்ற ஆசிரியர் காரை இந்துக் கல்லூரி) அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு வள்ளியம்மை தம்பதியரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான னுச.கணபதிப்பிள்ளை, சிவகாமிப்பிள்ளை தம்பதியரின் மருமகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணி யம், இராமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், சிவகுமாரன் (ஓய்வுபெற்ற ஆசிரியர், காரைநகர் யாழ்ரன் கல்லூரி), அம்பிகாதேவி (பிரதி அதிபர், ஏஞ்சல் சர்வ தேச பாடசாலை, மானிப்பாய்), னுச. ஜெயகுமாரன், (புற்றுநோய் நிபுணர், மகரகம) ஆகியோரின் பாசமிகு தந்தையும், லோகேஸ்வரி (ஆசிரியர், ஜோன் பொஸ்கோ) காலஞ்சென்ற இராஜரட்ணம், னுச. வாசுகி (களுபோவில வைத்தியசாலை) ஆகி யோரின் அன்பு மாமனாரும், சுகந்தன், சுகன்யா, கீர்த்தனா, ராகவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (18.12.2020) வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் பயிரிக்கூடல் காரைநகர் இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைக்காக குடும்ப மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
பயிரிக்கூடல், காரைநகர்.
தொடர்புகளுக்கு: 077 696 4976